Thursday, November 19, 2009

மஹேல ஜெயவத்னவின் அதிரடி ஆட்டம்.

·


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடையமே.இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட் இழப்பிற்கும் 426 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.இந்தியனி சார்பாக ராவிட்,தோனி,யூவராஜ் சிங்க் முறையே 177,110,68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.இலங்கை அணி சார்பாக பந்து வீசிய வேலகேடற ,முரளி,பிரசாத்,கேரத் முறையே 4,3,2,1 விக்கெட்களை தம்வசப்படுத்தினார்கள்.

பதிலுக்கு துடுப் பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 760 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.இதில் ஜெயவத்னா ,சமரவீர, தில்ஷன் முறையே 275,154,112 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.இந்தியனி சார்பாக பந்து வீசிய சாஹிர் கஹ்ன், ஷர்மா,
ஹர்பஜன் சிங்க் முறையே தல இரண்டு விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய மஹேல ஜெயவத்னா435 பந்துகளுக்கு 275 ஓட்டங்களை பெற்றிருந்தார்.இவர் 27 பவுண்டரிகளையும்,ஒரு சிக்ஸ்ரையும் பெற்றிருந்தார்.இவர் சதத்தினைப் பெற்ற வேலை அரங்கில் இருந்தோர் எழுந்து நின்று கை தட்டி மரியாதை செலுத்தினர்.அதே நேரம் யுவராஜ் சிங்க் கை கொடுத்து வாழ்த்தியது சிறப்பாகும்.மஹேலவின் சிறந்த துடுப் பாட்டத்தால் அதிரடியாக 275 ஓட்டங்களை பெற்றார்.பொறுத்திருந்து பார்ப்போம் எவ் அணி வெற்றி பெறப் போகின்றது என.






0 comments: