
இந்தப் படத்துடன் மோதத் தயாராகிறது ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள நான் அவனில்லை -2.
தீபாவளிக்கு வெளியான படங்களில் பேராண்மை மட்டுமே தப்பித்தது. மற்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கிவிட்டன.
தீபாவளிக்குப் பிறகு 6 திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ஆறுமே நாறிப் போய் பெரும் நஷ்டத்தைத் தந்துவிட்டன. இந்த ஆறு படங்களும் வெளியான சுவடே தெரியவில்லை. சன் டிவி விளம்பர தயவில் கண்டேன் காதலை ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அமீரின் யோகி ரிலீசாகிறது. இந்தப் படம் ஹாலிவுட்டுக்கு நிகரான தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, எந்த சமரசமும் செய்து கொள்ளாத அருமையான திரைக்கதையும் இந்தப் படத்தின் சிறப்பம்சம்.
சன் டிவி [^] வெளிப்படையாக கேட்ட பிறகும் கூட தராமல், சில பகுதிகளில் தானே சொந்தமாக வெளியிடுகிறார் அமீர். வேறு பல ஏரியாக்களையும் நல்ல விலைக்கு விற்றுள்ளார்.
இந்தப் படத்துடன் மோத வருகிறது ஜீவன் நடித்த நான் அவனில்லை - 2 படம் [^]. ஏற்கெனவே வெளியாகி வெற்றி [^] பெற்ற நான் அவனில்லை படத்தின் 2-ம் பாகமே இது.
இதிலும் 5 கதாநாயகிகள். ஒவ்வொரு பெண்ணையும் மணந்து ஏமாற்றி பணத்துடன் தப்பி ஓடுவதே கதை. செல்வா இயக்கியுள்ளார்.
இந்தப் படமும் வணிக ரீதியாக திருப்தியான விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இரு படங்களுக்குமே நல்ல பப்ளிசிட்டி வேறு. எனவே வணிக ரீதியாக திருப்தியான வசூல் தரும் என நம்புகிறார்கள் விநியோகஸ்தர்கள்.
ஜெயிக்குமா... பார்க்கலாம்
0 comments:
Post a Comment