Tuesday, November 24, 2009

காச நோய் மிகவும் ஆபத்தானது.

· 0 comments

நோயின் தாக்கம்

காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச்சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.

இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது Tuberclebacillus (டியூபர்க்கில் பாசிலசு)அல்லது TUBERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும். சில மருந்துகள் உதவியால் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை.

இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்துகாற்றில் பரவும் தன்மை கொண்டது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது துஞ்சுநிலையில்(Latent TB) காணப்படும். அப்படி உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர்.

நோயைக் கண்டு பிடிக்க நெஞ்சில் X-கதிர் படப்பிடிப்பு, தோலில் செய்யப்படும் டியூபர்க்குலின் (Tuberculin) பரிசோதனை, உடல் நீர்மங்களின்நுண்ணுயிர் வளர்ப்பு மெய்த்தேர்வு (பரிசோதனை) என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயைக் குணப்படுத்த கூட்டாக பல்வேறு நுண்ணுயிர்கொல்லிகள் இணைத்து, நீண்ட காலத்துக்கு கொடுக்கிறார்கள். ஆனால் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து நுண்ணுயிர் கொல்லிகளையும் எதிர்க்கும் திறனுள்ள பக்டீரியா கிளைவகை உருவாகியிருப்பது (Multi Drug Resistance) மிகப் பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது. இதனால் புதிதாக உருவாகியிருக்கும் நுண்ணுயிர் வகைக்கு மக்கள் நோயெதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் நோயின் வலிமை (தீவிரம்) அதிகரித்து வருகிறது. உலக நாடுகளெங்கும் உள்ள பலஅறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம், இதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பதில் முனைப்பாக உள்ளனர். 'பி.சி.ஜி' (பா.கா.கு, BCG) எனப்படும் எதிர்ப்பூசி போட்டுக் கொள்வதும் பல நாடுகளில் நடை முறையிலுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம்மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் தூய்நல (சுகாதார) நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது[2]. நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது[3] . எய்ட்ஃசு நோயை உருவாக்கும் மனித நோயெதிர்ப்புக்குறைபாட்டு வைரசின் (HIV) தாக்கத்திற்குள்ளான நோயாளிகளில் ஏற்படக்கூடிய முக்கியமான இரண்டாவது தொற்றாக (secondary infection) இந்த காசநோயே காணப்படுகிறது[4].

2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, 2003 ஆம் ஆண்டில் 88 இலட்சம் மக்கள் புதிதாக நோய்த் தொற்றுக்குட்பட்டதுடன், 17 இலட்சம் மக்கள் இந்நோயினால் இறந்திருக்கிறார்கள். இந்நோயினால், ஆப்பிரிக்க நாட்டிலேயே மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. [3], [4], [5]. வளர்ந்துவரும் நாடுகளில், 2004 ஆம் ஆண்டில், 1.46 கோடி தீவிர (நோய்முதிர்ந்த) நோயாளிகளும், 89 இலட்சம் புதிய நோயாளிகளும், 16 இலட்சம் இறப்புக்களும், அறியப்பட்டன[2]. மேலும் நோயெதிர்ப்பு குறைபாட்டு நோய் (AIDS), உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளின் பயன்பாடு போன்ற காரணங்களால், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்நோய் பரவி வருகிறது. இந்நோயானது ஆசிய, ஆப்பிரிக்கநாட்டினரில் 80% உம், அமெரிக்காவில் 5-10% உம் காணப்படுகிறது[1].

2. வகைப்படுத்தல்

தற்போது காசநோய்க்கான சிகிச்சைக்கான பகுப்பு முறையானது, நோயின் தொற்றுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.[5]

காச நோய்க்கான வகைப்படுத்தல் முறை
வகுப்புவகைவிளக்கம்
0காச நோயை எதிர் கொள்ளாமை
தொற்றுக்குட்படாமை
நோயை எதிர் கொண்ட வரலாறு இல்லாமை
டியூபர்க்குலின் தோற் பரிசோதனைக்கு எதிர் விளைவு
1காச நோயை எதிர் கொண்டிருந்தமை
தொற்று உறுதிப்படுத்தப்படாமை
நோயை எதிர் கொண்டமைக்கான வரலாறு உள்ளமை
டியூபர்க்குலின் தோற் பரிசோதனைக்கு எதிர் விளைவு
2காச நோய்த் தொற்று
நோயின்மை
டியூபர்க்குலின் தோற் பரிசோதனைக்கு நேர் விளைவு
பக்டீரியா சோதனையில் எதிர் விளைவு (செய்யப்பட்டிருந்தால்)
காச நோயானது மருத்துவக் கணிப்பு நோக்கிலோ, பக்டீரிய சோதனை மூலமாகவோ, அல்லது கதிர் வீச்சு முறையினாலோ (X-கதிர்) உறுதிப்படுத்தாத நிலை
3வைத்திய சோதனையில் செய்வினை கொண்டதுமை.டியூபர்குலோசிசு (M. tuberculosis) வளர்ந்திருத்தல் (செய்திருந்தால்)
காச நோயானது வைத்திய நோக்கில், பக்டீரிய சோதனை மூலமாக, கதிர் வீச்சு முறையினால் (X-கதிர்) உறுதிப்படுத்திய நிலை
4காசநோய்
வைத்திய சோதனையில் செய்வினையற்றது
காசநோய் வரலாற்றைக் கொண்டிருத்தல்
அல்லது
அசாதாரணமான, ஆனால் உறுதிச் சமநிலையுள்ள கதிரியக்கத் தோற்றப்பாடு
டியூபர்க்குலின் தோற் பரிசோதனைக்கு நேர் விளைவு
பக்டீரிய சோதனையில் எதிர் விளைவு (செய்திருந்தால்)
அத்துடன்
வைத்திய நோக்கிலோ, X-கதிர் பரிசோதனையிலோ உறுதிப் படுத்தாத நிலை
5காச நோய்க்கான ஐயம்நோய் நிறுவுதல் முற்றுப்பெறாத நிலை
காச நோய் உள்ளதா, இல்லையா என்பது 3 மாதங்களில் உறுதி செய்யப்பட வேண்டும்
ஏனைய தகவல்கள் தொடரும்.

Friday, November 20, 2009

யோகியுடன் மோதும் நான் அவனில்லை-2

· 0 comments


Naan Avan Illai 2
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள அமீரின் யோகி திரைப்படம் வரும் பக்ரீத் பண்டிகைக்கு ரிலீசாகிறது.

இந்தப் படத்துடன் மோதத் தயாராகிறது ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள நான் அவனில்லை -2.

தீபாவளிக்கு வெளியான படங்களில் பேராண்மை மட்டுமே தப்பித்தது. மற்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கிவிட்டன.

தீபாவளிக்குப் பிறகு 6 திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ஆறுமே நாறிப் போய் பெரும் நஷ்டத்தைத் தந்துவிட்டன. இந்த ஆறு படங்களும் வெளியான சுவடே தெரியவில்லை. சன் டிவி விளம்பர தயவில் கண்டேன் காதலை ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அமீரின் யோகி ரிலீசாகிறது. இந்தப் படம் ஹாலிவுட்டுக்கு நிகரான தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, எந்த சமரசமும் செய்து கொள்ளாத அருமையான திரைக்கதையும் இந்தப் படத்தின் சிறப்பம்சம்.

சன் டிவி [^] வெளிப்படையாக கேட்ட பிறகும் கூட தராமல், சில பகுதிகளில் தானே சொந்தமாக வெளியிடுகிறார் அமீர். வேறு பல ஏரியாக்களையும் நல்ல விலைக்கு விற்றுள்ளார்.

இந்தப் படத்துடன் மோத வருகிறது ஜீவன் நடித்த நான் அவனில்லை - 2 படம் [^]. ஏற்கெனவே வெளியாகி வெற்றி [^] பெற்ற நான் அவனில்லை படத்தின் 2-ம் பாகமே இது.

இதிலும் 5 கதாநாயகிகள். ஒவ்வொரு பெண்ணையும் மணந்து ஏமாற்றி பணத்துடன் தப்பி ஓடுவதே கதை. செல்வா இயக்கியுள்ளார்.

இந்தப் படமும் வணிக ரீதியாக திருப்தியான விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இரு படங்களுக்குமே நல்ல பப்ளிசிட்டி வேறு. எனவே வணிக ரீதியாக திருப்தியான வசூல் தரும் என நம்புகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

ஜெயிக்குமா... பார்க்கலாம்

சிறந்த டி.வி. நடிகர் நடிகை தேர்வில் மோசடி

· 0 commentsதமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கு நடிகை ராதிகா கண்டன கடிதம் அனுப்பி அதை அறிக்கையாகவும் வெளியிட்டு உள்ளார்.
அக்கடிதத்தில் ராதிகா கூறியுள்ளதாவது,

கடந்த 14 ந்தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் பெஸ்ட் (சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு) சார்பில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் பல சங்கடமான நிகழ்வுகள் நடந்தேறின. அது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது.

சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், கதை, வசன கர்த்தா வரிசையில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவே இல்லை. என்ன காரணத்துக்காக அவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டன? என்பதும் தெரியவில்லை. மேற்படி விழாவில் கலந்து கொள்ளமாட்டார்களோ என்ற சந்தேகத்தின் பேரில் சில பேரிடம், குறிப்பாக நடிகர், நடிகைகளிடம் உங்களுக்குத் தான் விருது தரப்போகிறோம் என்று உறுதியளித்து விழாவிற்கு வரவழைத்ததாக அறிகிறேன்.

தகுதியும், திறமையும் படைத்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் விழாவிற்கு வரவழைப்பதற்காகவே பலரையும் அழைத்து அதைபடம் பிடித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காட்ட முனைவது தவறான முன் உதாரணமாகவே அமையும்.

எனவே தகுதி, திறமையின் அடிப்படையில் எனக்கு விருது வழங்கப்பட்டு இருந்தாலும் இதே போல் திறமை வாய்ந்த பலபேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி விரும்பவில்லை. இந்த தவறுகள் மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் பெஸ்ட் அமைப்பின் எதிர்கால நலனை கருதியும் இது போன்ற நிகழ்வுகள் மேலும் தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடும் எனக்கு வழங்கிய விருதை உங்களிடமே திருப்பி ஒப்படைக்கிறேன்.

மேற்படி விருது வழங்கிய நிகழ்ச்சியில் நான் இடம் பெறும் எந்த ஒரு புகைப்படம் அல்லது படக்காட்சிகள் உள்பட எவையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
என்று ராதிகா கூறியுள்ளார்

இலவசசமாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க.

· 0 comments

நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை எமது தளத்தில் பிரசுரிக்க vignaraj@live.com முகவரிக்கு உங்கள் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

சிங்கத்துக்காக உருவான காவல்நிலையம்

· 0 comments

ஸ்டுடியொ க்ரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம்’ படத்தில் அரிவாள் இயக்குனர் ஹரி ரொம்பவே பிஸியாக இருக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடி அருந்ததி புகழ் அனுஷ்கா.

படத்தில் காவல்நிலையம் நடக்கும் சம்பவம் தொடர்பான ஒரு காட்சி வர, இந்த காட்சியைப் படம் பிடிக்க ஒரு காவல் நிலையம் தேவைப்பட்டது. காவல் நிலையம் அமைக்க சென்னை நகரம் முழுவதும் இடத்தை தேடோ தேடு என்று தேடினார் ஹரி.

ஆனால் ஒரு இடம் கூட அவர் நினைத்தபடி அமையவில்லை. கடைசியாக சாலிகிராமத்தில் அமைக்கலாம் என்று முடிவுசெய்து ஒரு இரவுக்குள் அந்த காவல் நிலையத்தை அமைத்திருக்கிறார்கள்.

காலையில் அந்த காவல்நிலையத்தைப் பார்த்த மக்கள் ஏற்கனவே ஒரு காவல் நிலையம் இந்த ஏரியவில் இருக்க, இன்னொரு காவல் நிலையமா? என்று ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறார்கள்.

அதற்கு பின் தான் தெரிந்துது, இது சினிமாவுக்காக போடப்பட்ட செட் என்று. அந்த அளவுக்கு இயக்குனர் ஹரி அந்த செட்டை அமைத்திருந்தார்

Thursday, November 19, 2009

மஹேல ஜெயவத்னவின் அதிரடி ஆட்டம்.

· 0 comments


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடையமே.இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட் இழப்பிற்கும் 426 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.இந்தியனி சார்பாக ராவிட்,தோனி,யூவராஜ் சிங்க் முறையே 177,110,68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.இலங்கை அணி சார்பாக பந்து வீசிய வேலகேடற ,முரளி,பிரசாத்,கேரத் முறையே 4,3,2,1 விக்கெட்களை தம்வசப்படுத்தினார்கள்.

பதிலுக்கு துடுப் பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 760 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.இதில் ஜெயவத்னா ,சமரவீர, தில்ஷன் முறையே 275,154,112 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.இந்தியனி சார்பாக பந்து வீசிய சாஹிர் கஹ்ன், ஷர்மா,
ஹர்பஜன் சிங்க் முறையே தல இரண்டு விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய மஹேல ஜெயவத்னா435 பந்துகளுக்கு 275 ஓட்டங்களை பெற்றிருந்தார்.இவர் 27 பவுண்டரிகளையும்,ஒரு சிக்ஸ்ரையும் பெற்றிருந்தார்.இவர் சதத்தினைப் பெற்ற வேலை அரங்கில் இருந்தோர் எழுந்து நின்று கை தட்டி மரியாதை செலுத்தினர்.அதே நேரம் யுவராஜ் சிங்க் கை கொடுத்து வாழ்த்தியது சிறப்பாகும்.மஹேலவின் சிறந்த துடுப் பாட்டத்தால் அதிரடியாக 275 ஓட்டங்களை பெற்றார்.பொறுத்திருந்து பார்ப்போம் எவ் அணி வெற்றி பெறப் போகின்றது என.


இலவச வைத்தியம்.

· 1 comments

மூல நோய குணமாக

வேப்ப மர வித்துக்களை உடைத்து உள்ளே உள்ள பருப்புக்களை மட்டும் எடுத்து,சுத்தமாய் அம்மியில் வைத்து,பசுப்பால் விட்டு மை போல அரைத்து இரண்டு மொச்சைக் கொட்டையளவு எடுத்து வில் போட்டு விழுங்கி விட வேண்டும்.இந்த விதமாக தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீண்ட காலமாக இருக்கும் மூலம் கரைந்து மூல நோய அடியோடு குணமாகும்.இந்த மருந்தை சாப்பிடும் போது அதிக காரம் சாப்பிடக்கூடாது.காரம் தேவையானால் மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.மோர்,தயிர்,பால் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பாகற்காய் சேர்க்கக் கூடாது.ஏழு நாட்களில் சுகம் தெரியும்.

இருதயப் படபடப்பு குணமாக

ஒரு சிலருக்கு இருதயம் பலவீனமாக இருப்பதன் காரணமாக அடிக்கடி இருதயப் படபடப்பு உண்டாகும்.இந்த சமயம் இருதயம் வேகமாகத் துடிக்கும்.இனம் தெரியாத ஒரு பயம் தோன்றும்.எதிலும் மனம் சொல்லாது.சில நிமிடங்களில் இந்த நிலை மாறிவிடும்.
சகய நிலை ஏற்ப்படும்.இதை உடனடியாகக் கவனித்து குணப்படித்திக் கொள்ள வேண்டும்.இதற்க்கு வெண் தாமரைப் பூ நல்ல குணம் கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது.வெண் தாமரைப் பூவைக் கொண்டு வந்து,அதன் வெண்ணிறமான இதழ்களை ஆய்ந்து எடுத்து அவைகளை பொடியாக நறுக்கி,ஒரு சுத்தமான சட்டியில் போடவும்.

அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காச்சி இறக்கி,இதழ்களைப் பிழிந்து சாறு எடுத்து வடி கட்டி வைத்துக் கொண்டு,வல்லாரை இலையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்த உரலில் போட்டு இடித்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து மூன்று தேக்கரண்டியளவு சாற்றை இதில் விட்டுக் கலக்கி கொடுத்து விட வேண்டும்.இந்த மருந்தை தொடர்ந்து பன்னிரண்டு நாள்கள் வரை காலை மாலையாகக் கொடுத்து வந்தால் இருதயப் படபடப்பு பூரணமாகக் குணமாகும்.

வைத்தியம் தொடரும்.(உங்கள் கருத்துக்களை என் vignaraj@live.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.